Editorial / 2019 ஜூலை 25 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக இன்று காலை பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகள் நளினி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இத்தம்பதியின் மகளான ஹரித்ரா (26), மருத்துவப் பட்டம் பெற்று லண்டனில் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில், ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய தன்னை 6 மாதம் பரோலில் விடுவிக்கக் கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், நளினியை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த 5ஆம் திகதி உத்தரவிட்டது.
இந்தநிலையில், அவர் இன்று வியாழக்கிழமை காலை 9.40 மணியளவில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஊடகங்களிடம் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் நளினிக்கு பரோல் அளிக்கப்பட்டு உள்ளது.
12 minute ago
19 minute ago
23 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
23 minute ago
49 minute ago