2025 மே 19, திங்கட்கிழமை

சீன பயணத்தை முடித்து துக்கத்தை எதிர்கொள்ளும் பச்லெட்

Freelancer   / 2022 ஜூன் 02 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரவலான விமர்சனங்களுக்கு மத்தியில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகள் மிச்சேல் பச்லெட், தனது ஆறு நாள் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டார்.

இந்த பயணம் விசாரணைக்காக அல்ல என்று கூறிய பின்னர், சீன அதிகாரிகளுடனான தனது சந்திப்புகளில் வெளிப்படையாக பேசியதையடுத்து விமர்சனங்கள் எழுந்திருந்தன.

சின்ஜியாங் மாகாணத்தில் தான் பார்வையிட்ட ஒரே ஒரு சிறைச்சாலை, அரசியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட உய்குர்களை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலை அல்ல என்பதை ஐ.நா உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஒப்புக்கொண்டார்.

இனப்படுகொலை செய்த அரசாங்கத்தைக் கண்டிக்கக்கூட முடியாமல் ஐ.நா உயர்ஸ்தானிகர் சீனாவுக்கும் கிழக்கு துர்கிஸ்தானுக்கும் சென்றது கேவலமானது என்றும் அவர் தனது ஆணையை தவறவிட்டு விட்டார் என்றும் உய்குர் காங்கிரஸின் தலைவர் டோல்குன் இசா கூறினார்.

இந்த விஜயம் ஒரு விசாரணை அல்ல என்றும், மனித உரிமைகள் தொடர்பாக சீனாவின் மூத்த தலைவர்களுடன் நேரடி கலந்துரையாடல்களை நடத்துவதற்கான வாய்ப்பு என்றும் தனது அறிக்கையை வெளியிடும் போது பச்லெட் கூறினார்.

பச்லெட்டின் சீன விஜயத்துக்கு முன்னர், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் 59 குழுக்கள், இந்த விஜயத்தை சீன அரசாங்கம் கையாளுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டை வலியுறுத்தியுள்ளன.

சின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய குழுக்களின் உறுப்பினர்களுக்கு எதிரான வெகுஜன தடுப்பு, சித்திரவதை, கலாச்சார துன்புறுத்தல் மற்றும் பிற குற்றங்களின் பரவலான மற்றும் முறையான கொள்கைகளை சீன அரசாங்கம் செய்துள்ளதாக அதிகளவான மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X