Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மார்ச் 02 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவைச் சேர்ந்த 7 பல்கலைக்கழகங்களுக்கு, தாய்வான் தடை விதித்துள்ளது.
தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடித்து வருகிறது. இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது.
“எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது” என, தாய்வான் பாதுகாப்பு அமைச்சு குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பீஹாங் பல்கலைக்கழகம், பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் மற்றும் விண்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்களுக்கு, தாய்வான் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக, தாய்வான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைக்கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த பல்கலைக்கழகங்களுடன் தாய்வானில் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வித கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .