2025 மே 03, சனிக்கிழமை

சீன - ரஷ்ய தலைவர்கள் பேச்சுவார்த்தை

Freelancer   / 2025 ஜனவரி 23 , மு.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளனர்.
 
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த காணொளி அழைப்பில் இரு நாட்டு தலைவர்களும் ட்ரம்பின் நிர்வாகத்துடனான தங்கள் வருங்கால தொடர்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
 
அத்துடன், இருதரப்பு உறவுகளை உயர்ந்த மட்டத்துக்கு கொண்டு செல்வதாகவும் இதன்போது அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
 
வெளிப்புற நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பெய்ஜிங் மற்றும் மொஸ்கோவின் மூலோபாய ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தவும், பரஸ்பர ஆதரவை உறுதிப்படுத்தவும், நியாயமான நலன்களைப் பாதுகாக்கவும் முன்வருமாறு விளாடிமிர் புடினுக்கு சீ ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X