Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமது என சீனா கோரும் தாய்வானைச் சுற்றிப் பறந்த சீன ஜெட்களை இடைமறிக்க ஆயுதந்தரித்த ஜெட்களை தாய்வானின் விமானப் படை நேற்று அனுப்பியிருந்தது.
இந்நிலையில், தாய்வானின் ஜனாதிபதி சை இங்-வென் முதலில் பதவியேற்றது முதல் தீவைச் சுற்றுதல் என தாம் அழைக்கும் பறப்புக்களை சீனா மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், தாய்வானுக்கு தெற்காக பஷி கால்வாயுக்குள் சீன ஜே-11 தாக்குதல் விமானங்களும், எச்-6 குண்டுவீச்சு விமானங்களும் பறந்ததாகவும், பின்னர் பசுபிக் சமுத்திரத்துக்குள் பறந்ததாகவும் தொடர்ந்து மியாகோ நீரிணையூடாக தளத்துக்குச் சென்றதாக அறிக்கையொன்றில் தாய்வானின் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.
மியாகோ நீரிணையானது ஜப்பானியத் தீவுகளான மியாகோ, ஒகினாவாவுக்கிடையே தாய்வானுக்கு வடகிழக்காக காணப்படுகிறது.
சீன எச்-6 குண்டுவீச்சி விமானமொன்றுக்கு அருகால் தாய்வான் விமானப்படையின் எஃப்-16 விமானம் செல்லும் படத்தை பாதுகாப்பமைச்சு வழங்கியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .