2025 ஜூலை 30, புதன்கிழமை

சீனத் தலைநகர் நகரில் கடும் மழையால் 30 பேர் உயிரிழப்பு

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 29 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனத் தலைநகர் பெய்ஜிங்கை கடும் மழை மூழ்கடித்துள்ள நிலையில் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான ஸின்குவா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெய்ஜிங்கின் மலைப்பாங்களான வட மாவட்டங்களிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

543 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி வட மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக ஸின்குவா குறிப்பிட்டுள்ளது. இதேவேளை 300 மில்லி மீற்றரளவிலான மழை வீழ்ச்சி இன்று பெய்ஜிங்கில் எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .