2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீனாவிடமிருந்து பெரிய முதலீடுகளை தலிபான் ஆட்சி எதிர்பார்க்கிறது

Editorial   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காபூல் (ஆப்கானிஸ்தான்):

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் விடுவிப்பை அடுத்து எதிர்வரும் ஆறு மாதங்களில் தலிபான் ஆட்சி சீனாவிடமிருந்து பெரிய முதலீடுகளை எதிர்பார்த்திருப்பதாக பத்திரிகை செய்திகளின்படி தெரியவருகிறது.

இவ்வார முற்பகுதியில் தலிபான் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் தங்கள் குழு சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையில் (CPEC) இணைந்துகொள்ளவிரும்புவதை வெளிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் நடைபெறக்கூடிய திட்டங்கள் தொடர்பாக சீனா தலிபானை 2018ஆம் ஆண்டுமுதல் ஆதரித்து வந்ததாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி நிக்கெய் ஏசியா (Nikkei Asia) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பீஜிங்குக்கும், தலிபான்களுக்கும் இடையில் பல வாய்மொழி ஒப்பந்தங்கள் இருந்துள்ளன. தலிபான்கள் உலக அங்கீகாரத்தைப் பெறும்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் சீனா உள் கட்டமைப்ளூபு வேலை திட்டங்களை ஆரம்பிக்கும் என்றும் அச்செய்திகள் தெரிவித்தன.

புதன்கிழமையன்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஸியால் வெளியுறவு அமைச்சர்களுக்கான சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் அண்டை நாடுகளான சீனா, ஈரான், தாஜிகிஸ்தான், டர்க்மெனிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு அசை;சர்கள் பங்குபற்றினர்.

இந்த கூட்டத்தின்போது ஆப்கானிஸ்தானுக்கு அவசர உதவியாக தானியங்கள்,  குளிர்கால பொருட்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் உட்பட யு.எஸ்.டி.31 (USD 31 million) மில்லியன்களை வழங்குவாதாக சீனா உறுதியளித்தது. சீனாவால் தற்பொழுது செய்யமுடிந்தது என்னவெனில் பொருளாதார நடவடிக்கைகளில் தேவையான தொடர்புகளையும் மக்களோடு தொடர்புகளையும்  தலிபான்களுக்கு ஏற்படுத்துவதாகும் என்று சீன பத்திரிகைகள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .