2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீனாவில் வேலையில்லாத் திண்டாட்டம்

Freelancer   / 2022 ஜூலை 24 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 16-24 வயதுடைய இளைஞர்களின் வேலையின்மை ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 19.3 சதவீதம் என்ற சாதனையை எட்டியுள்ளது.

சீனாவின் வேலை நிலைமையை உறுதிப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்லூரிப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருப்பதாக துணை-பிரீமியர் ஹு சுன்ஹுவா தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான வேலைகளை அவர் மேற்பார்வை செய்வதாக ஷெஜியாங் மாகாணத்துக்கான பயணத்தின் போது ஹூ கூறியதாக அரச ஊடகங்கள் தெரிவித்ததுடன், மேலதிக விவரங்களை தெரிவிக்கவில்லை.

ஷாங்காய்க்கு அருகில் உள்ள ஷெஜியாங் மாகாணத்தில், ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கம்,  நகர்ப்புற வேலையின்மை விகிதத்தை தேசிய சராசரியை விட அதிகமாக உயர்த்தியது.

ஜூன் மாதத்தில், அமெரிக்காவில் 16-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை 8.1 சதவீதமாகவும் மே மாதத்தில் 7.8 சதவீதமாகவும் இருந்தது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இளைஞர்களின் வேலையின்மை மே மாதத்தில் 13.3 சதவீதமாக இருந்ததுடன், ஜப்பானில், மே மாதத்தில் இந்த அளவு 3.8 சதவீதமாக இருந்தது.

தென் கொரியாவில், 15-29 வயதுடையவர்களிடையேயான வேலையின்மை வீம் மே மாதத்தில் 7.2 சதவீதத்திலிருந்து ஜூன் மாதத்தில் 6.9 ஆகக் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஆட்சேர்ப்பு முயற்சிகளில் தாமதம் மற்றும் ஆட்சேர்ப்பு தேவை குறைதல், அண்மைக்காலமாக பாரியளவிலான பல்கலைக்கழக பட்டதாரிகள்  உட்சேர்ப்பு ஆகியவை இளைஞர்கள் எதிர்கொள்ளும் கணிசமான வேலை அழுத்தத்துக்கு காரணம் என, சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவிக்கிறது.

அதிக வேலைவாய்ப்பின்மை பிரச்சினைமே மாதத்தில் 5.9 சதவீதத்தில் இருந்து சிறிது சரிந்த போதிலும், கணக்கெடுக்கப்பட்ட நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.  

16-24 வயதுக்குட்பட்டவர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதற்குக் காரணங்களாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சியின்மை மற்றும் சேவைத் துறையின் மோசமான வளர்ச்சி மற்றும் வரலாற்று ரீதியாக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கியமை என்பனவாகும்  என்று சீன தலைமைப் பொருளாதார மன்றத்தின் பணிப்பாளர் குவோ லீ கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .