Editorial / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவுக்கு வெளியே, COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இல்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
சீனாவின் ஹூபெய் மாநிலத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
COVID-19 கிருமியின் தீவிரத்தன்மையிலும், அது ஏற்படுத்திய மரணங்களின் எண்ணிக்கையிலும் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.
கிருமித்தொற்று காரணமாக நேற்று முன்தினம், ஹூபெய் மாநிலத்தில் 242 பேர் உயிரிழந்தனர்.
அன்று 14,840 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
பரிசோதனை முறை விரிவாக மாற்றியமைக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எளிதில் அடையாளம் காணப்பட்டனர் என்று உலகச் சுகாதார நிறுவன, அவசரகாலத் திட்டக்குழுத் தலைவர் மைக் ரயன் (Mike Ryan) கூறினார்.
சீனாவுக்கு வெளியே 24 நாடுகளில் COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளான இருவர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாடுகளில் இதுவரை 578 பேருக்குக் கிருமிப் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பினால் பலியானோர் எண்ணிக்கை 1483 ஆக உயர்ந்துள்ளதாக சீன சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .