2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான ஜி7-இன் முன்னெடுப்பு சூடுபிடிப்பு

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 24 , பி.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது மாநாட்டின்போது பூகோளக் கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டிணைவை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ஏனைய ஜி7 தலைவர்களும் கடந்த மாதம் ஆரம்பித்திருந்தனர். இது 2027-இல் பூகோளக் கட்டமைப்புக்காக 600 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதாகும்.

இந்நிலையில், குறித்த நடவடிக்கையானது சீனாவின் ட்ரில்லியன் டொலர் பட்டுப் பாதை முன்னெடுப்புக்கான எவ்வாறு மாற்றீடாக அமையும் என கவனம் பெற்றிருந்தது. பட்டுப்பாதை முன்னெடுப்பானது ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்காசியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா வரை நீளும் நவீன யுக பட்டுப்பாதையாகக் காணப்பட்டிருந்தது.

இதேவேளை, ஜி 7 முன்னெடுப்பானது முழுதும் புதிதானதல்ல. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு ஓராண்டுக்கு முன்னர் ஜி-7-இல் முன்னெடுக்கப்பட்ட மேம்பட்ட உலகை உருவாக்குவோம் திட்டத்தின் மீள் பதிப்பே இதுவாகும்.

எவ்வாறாயினும் இத்திட்டமானது அனைவருக்கும் நன்மை பயப்படுவதுடன், ஜனநாயகங்களுடன் இணைந்து நாடுகள் உறுதியான நன்மையைப் பெற உதவும் என ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .