2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் அந்தரத்தில் தொங்கிய மக்கள்

Ilango Bharathy   / 2022 ஜூலை 22 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவானது அண்மைக்காலமாக வரலாறு காணாத வெப்பநிலையை எதிர்கொண்டு வருகின்றது.  

குறிப்பாக பிரித்தானியாவின்  பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்ஸியஸை தொட்டுள்ளது.


இந்நிலையில், அண்மையில் ஸ்டாஃபோர்ட்ஷையரின் ஆல்டன் டவர்ஸ் என்ற கேளிக்கை பூங்காவில் உள்ள  ரோலர் கோஸ்டரில் பயணித்தவர் கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் அந்தரத்தில்  தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
குறித்த ரோலர் கோஸ்டரானது, இயந்திர கோளாறு காரணமாக அந்தரத்திலேயே நின்றிருக்கிறது.

இதனையடுத்து, களத்தில் இறங்கிய அதிகாரிகள், இப்போது  சிக்கலை சரிசெய்ய வாய்ப்பில்லை எனத்  தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் ரோலர் கோஸ்டரில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடையவே உடனடியாக மக்களை கீழே இறக்க வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் தள்ளப்பட்டனர்.

ஆகவே, நடந்தே கீழே வரும்படி மக்களை வலியுறுத்தியிருக்கின்றனர் அதிகாரிகள்.

வெப்பத்தினால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் வெப்ப தடுப்பு கவசங்கள் ஆகியவை அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து 65 அடி உயரத்தில் இருந்து மக்கள் பத்திரமாக கீழே இறங்கியுள்ளனர் .

இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X