2025 நவம்பர் 05, புதன்கிழமை

சுப்ரமணியசாமியின் உருவ​ பொம்மை எரிப்பு 100 பேர் கைது

Editorial   / 2019 ஜூலை 08 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகுல் காந்தி பற்றி விமர்சனம் செய்த பாரதிய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியசாமியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100 பேரை, பொலிஸார் நேற்று (08) கைது செய்தனர்.

ராகுல் காந்தி, போதைப் பொருள் பயன்படுத்துவதாக, ஒரு பத்திரிகைக்கு ​வழங்கிய செவ்வியில், சுப்ரமணியசாமி தெரிவித்திருந்தார். இதனால், பல மாநிலங்களிலும் , சுப்ரமணியசாமிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், காங்கிரஸ் தொண்டர்களால், இன்று (08) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சுப்ரமணிய சாமியின் உருவ பொம்மையை ‘பாடை’ கட்டி தூக்கி வந்தனர். அதை எரிக்க முயன்ற போது, அதைப் பொலிஸார் பிடுங்கியதையடுத்து, சுப்பிரமணியசாமியின் உருவப் படத்தைச் செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியசாமி, தமிழகத்துக்குள் வந்தால், எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்தே, பொலிஸாரால், 100 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X