Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் தாக்குதலில் பலியான ஈரானின் புரட்சிப் படைத் தளபதி சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் நெரிசலில் சிக்கி 56 பேர் பலியாகியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்:, “அ
மெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஈரான் புரட்சிப் படைத் தளபதி சுலைமானின் சொந்த ஊரான கொர்மனியில் அவரது
இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் பலியானதுடன் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை ஈரான் தலைநகரம் தெஹ்ரானில் நடந்த சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .