2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

சொகுசு விடுதியில் இளம்பெண்களின் சடலங்கள் மீட்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 27 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரீபியன் தீவு நாடான பெலிசேவில் உள்ள கடற்கரை சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்த பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தோழிகளான மூன்று பேரும் கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சான் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் திடீரென அவர்கள் மூன்று பேரும் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பெண்களின் சடலங்களையும் மீட்டனர்.

அத்துடன், அறையில் இருந்த காலி மது போத்தல்கள், போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் அதீத போதை காரணமாக இறந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X