Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

முறைகேடு வழக்கில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டிக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கூடாது எனக் கூறி இந்திய நடுவண் புலனாய்வுச் செயலகம் (சி.பி.ஐ) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது முதலமைச்சர் ஜகன் மோகனுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தனது தந்தை ராஜசேகர ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, தனது தந்தையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு முதலீடுகளை பெற்றதாக முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி, அவரது கணக்காய்வாளரும் வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான விஜயசாய் ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐயால் 11 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தன் மீதான குற்றங்களை முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி மறுத்த போதிலும் 2012ஆம் ஆண்டு மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார். 16 மாதங்கள் சிறைவாசத்துக்குகு பிறகு பிணையில் வெளியே வந்த ஜகன் மோகன் ரெட்டி ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சித் தலைவரானார்.
2012ஆம் ஆண்டுக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராகாத முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதால், வாரத்துக்கு ஒரு முறை விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்கும்படி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். பிறகு முதலமைசராக பொறுப்பேற்றதால் அரசுப் பணிகள் காரணமாக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
9 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago