Editorial / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது அரசியல் வைரியான ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டுச் சக்தியொன்றின் உதவியைப் பெற ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயன்றார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவி விலக்குவதற்கான உத்தியோகபூர்வ விசாரணையை ஐக்கிய அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் நேற்று ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கட்டாயம் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகன்ரான ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேற்குறப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த நடவடிக்கைகளை பழிவாங்கல் என வர்ணித்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவி விலக்கும் விசாரணைக்கு ஜனநாயகக் கட்சியினரிடத்தே பலத்த ஆதரவு காணப்படுகின்றபோதும், குடியரசுக் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படும் செனட்டில் குறித்த விசாரணையானது நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் காணப்படவில்லை.
உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸியுடனான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தொலைபேசி அழைப்பொன்று தொடர்பாக உத்தியோகபூர்வ முறைப்பாடொன்றை புலனாய்வுச் செய்திகளை வெளிப்படுத்துபவர் மேற்கொண்டதான அறிக்கைகளைத் தொடர்ந்தே மேற்குறித்த விடயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
குறிப்பாக என்ன கூறப்பட்டது என்பது இன்னும் தெளிவில்லாமல் இருக்கின்ற நிலையில், ஜோ பைடன் மற்றும் அவரது மகனுக்கெதிரான மோசடிக் குற்றச்சாட்டுகளை உக்ரேனை விசாரிக்கச் செய்வதற்காக இராணுவ நிதியுதவியை இடைநிறுத்தப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார் என ஜனநாயகக் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், வொலடீமர் ஸிலென்ஸ்கியுடன் ஜோ பைடன் குறித்து கலந்துரையாடியதாக ஒத்துக்கொண்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இராணுவ உதவியை இடைநிறுத்துவதாக அச்சுறுத்துவதன் மூலம் ஐரோப்பாவின் உதவியை அதிகரிக்கவே முயன்றதாகக் கூறியுள்ளார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago