Editorial / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் பணிகளை ஆற்றக்கூடிய உடற்றகுதியுடன் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் இருப்பதாக, ஜோ பைடனின் பிரசாரக் குழுவால் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் ஜோ பைடனின் வைத்தியர் கெவின் ஓ கோணர் நேற்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்புக்கெதிராக ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட எதிர்பார்க்கும் 15 பேரில் 77 வயதான ஜோ பைடன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், அவரது முன்னணி மூன்று போட்டியாளர்களும் 70 வயது தொடக்கம் 79 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.
அந்தவகையில், ஜோ பைடனுக்கு 1988ஆம் ஆண்டு மூளைக் குருதிநாள வீக்கம் இருந்திருந்த நிலையில் தற்போது அதுதொடர்பான எதுவித அறிகுறிகள் இல்லாததுடன், அவரது இதயத் துடிப்பு சீராக உள்ளது என கெவின் ஓ கோணர் தெரிவித்துள்ளார்.
இரத்தக்கொழுப்புக்காக ஜோ பைடன் மருந்தெடுப்பதாகவும், இள வயதில் அதிகளவு சூரிய ஒளி பட்டதன் காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட தோல் புற்றுநோயைக் கொண்டிருப்பதை தவிர வேறெந்த புற்றுநோயைக் கொண்டிருக்கவில்லையென்றும், நீரிழிவைக் கொண்டிருக்கவில்லையெனவும் கெவின் ஓ கோணர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .