2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜப்பானின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் வென்ற கிஷிடா

Shanmugan Murugavel   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயக் கட்சியைத் தலைமை தாங்குவதற்கான போட்டியில் புயுமியோ கிஷிடா வென்றுள்ளார்.

அந்தவகையில், கிஷிடா ஜப்பானின் அடுத்த பிரதமராகவுள்ளார்.

ஓராண்டில் பதவி விலகத் தீர்மானித்துள்ள யொஷிஹிடே சுகாவை கிஷிடா பிரதியிடவுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு வெற்றி பெற்றுக் கொடுப்பதே கிஷிடாவின் முதலாவது பணியாக உள்ளது.

பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக்கை நடாத்தியமையை அடுத்து ஜனநாயகக் கட்சியின் பிரபல்யத்தன்மை வீழ்ச்சியடைந்திருந்தது.

முன்னாள் வெளிநாட்டமைச்சரான கிஷிடா, பரவலாக பிரபல்யமாயிருந்த தரோ கொனோவை கட்சித் தலைவர் போட்டியில் வென்றிருந்தார்.

பாராளுமன்றத்தில் ஜனநாயக் கட்சியே பெரும்பான்மையாக இருக்கின்ற நிலையில், கிஷிடா பிரதமராவது ஏறத்தாழ உறுதியாயுள்ளது.

முன்னதாக, சுகாவிடம் பிரதமர் பதவியை கிஷிடா இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .