Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் விடும் ஜப்பானின் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20,000க்கு அதிகமமான மக்கள் உயிரிழந்தனர். இந்தப் பேரிடரில் மாயமான 1000க்கும் அதிகமானவர்களை தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஃபுகுஷிமா அணுமின் நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் அழிக்கப்பட்ட அணு உலையில் இருந்த எரிபொருள்களுடன் தொடர்புடைய கதிரியக்க தன்மையுடைய மாசுபடுத்தப்பட்ட நீரை சுத்திகரிக்கும் முற்சியில் ஜப்பான் கடந்த சில ஆண்டுகளாகாக இறங்கியது.
அவ்வாறு சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை ராட்சத தொட்டிகளில் ஜப்பான் சேகரித்து வைத்துள்ளது. தற்போது சுமார் 1.3 மில்லியன் தொன் அளவிலான சுத்தம் செய்யப்பட்ட கதிரியக்க நீரை தொட்டிகளில் ஜப்பான் சேகரித்து வைத்திருக்கிறது.
இதில், முதற்கட்ட அளவிலான தண்ணீரை பசுபிக் கடலில் கலக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் இந்த முடிவுக்குதான் அண்டை நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, “ஜப்பான் தண்ணிரைக் கடலில் திறந்தால் கடலின் தன்மையும், கடல் உணவும் பாதிக்கப்பட்டு எங்கள் மீனவர்களின் வழ்வாதாரம் கேள்விக்குறியாகும்” என்று தென் கொரியா கூறி வருகிறது.
சீனாவும் ஜப்பானின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் ஜப்பானின் 10 மாகாணங்களிலிருந்து உணவை இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது. ஆனால், ஜப்பானோ , சுத்திகரிக்கப்பட்ட நீரில் 80% கதரியக்க தன்மை நீங்கிவிட்டது என்று விளக்கம் அளித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
32 minute ago