2025 மே 15, வியாழக்கிழமை

’ஜம்ப்-ரோப்பிங்’ மூலம் கின்னஸ் சாதனை படைத்த பூனை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் உள்ள மிசூரி பகுதியை சேர்ந்த கிட்கேட் என்ற 13 வயது பூனை அதன் உரிமையாளர் திரிஷா சீப்ரிட் உதவியுடன் ஒரு நிமிடத்தில் அதிக முறை ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பூனை அதன் உரிமையாளருடன் சேர்ந்து ஜம்ப் ரோப்பிங் திறமையை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு நிமிடத்தில் 9 முறை ஸ்கிப்பிங் செய்து கிட்கேட் பூனை இந்த சாதனையை படைத்துள்ளது.

இந்த சாதனை குறித்து பூனையின் உரிமையாளரான திரிஷா சீப்ரிட் கூறுகையில், ஜம்ப் ரோப்பிங் செய்வது எனக்கும், எனது பூனைக்கும் பிடித்து வருகிறது. மேலும் பூனையின் வயது காரணமாக நாங்கள் குதிப்பதை குறைந்த எண்ணிக்கையில் வைத்திருந்தோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .