2025 மே 14, புதன்கிழமை

ஜின்பிங்கை சந்தித்தார் புதின்

Freelancer   / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் செவ்வாய்கிழமை (17​) சீனா சென்றடைந்தார்.

இந்நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

ரஷ்யா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி புதின் பங்கேற்றார். அப்போது பேசிய ஜனாதிபதி புதின், பெல்ட் ரோடு திட்டத்தை சீனா வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ரஷ்யா அதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார்

உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷ்யாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புதின்-ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X