Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய நாடாளுமன்றத்தை இடைநிறுத்தும் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தீர்மானமானது சட்டரீதியற்றது என பிரித்தானிய உச்ச நீதிமன்றம் இன்று (24) தீர்ப்பளித்துள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் ஐந்து வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இடைநிறுத்தி அல்லது ஒத்தி வைத்திருந்த நிலையில், அடுத்த மாதம் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களின் பணிகளை ஆற்ற விடாது தடுப்பது பிழையானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு திரும்புவார்கள் என நாடாளுமன்ற சபாநாயகர் ஜோன் பெர்கோ இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்தவகையில், பிரதமர் பொரிஸ் ஜோன்சனை பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ள நிலையில் தீர்ப்பை ஆராய்ந்து வருவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மகாராணியின் பேச்சுக்கு முன்னால் நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க விரும்புவதாகவும் ஏனெனில் தனது அரசாங்கத்தின் புதிய கொள்கைகளைத் தான் முன்வைக்க முடியும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வாதிட்டிருந்தார்.
எவ்வாறெனினும், பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றும் திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வதைத் தடுக்க முயல்வதாகவும், மகாராணியின் பேச்சொன்றுக்கு தேவையானதை விட அதிக காலம் ஒத்திவைப்பு இருப்பதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago