Freelancer / 2025 ஜனவரி 30 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
'டிக் டாக்’ வீடியோ வெளியிட்ட 15 வயது மகளை அவரது தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவமொன்று, பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, 'டிக் டாக்' சமூக ஊடகத்தில் வீடியோ வெளிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சிறுமியின் குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றது.
இந்நிலையில் சிறுமி, 'டிக் டாக்' வீடியோ போடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இது அவருடைய தந்தைக்கு பிடிக்கவில்லை. 'டிக் டாக்கில் வீடியோ போடுவதை நிறுத்தும்படி பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் சிறுமி கேட்கவில்லை.
இதனிடையே பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள சொந்த ஊருக்கு சிறுமியின் குடும்பம் கடந்த 15ஆம் திகதி வந்தனர். அப்போது, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். எங்கிருந்தோ பாய்ந்து வந்த குண்டுபட்டு சிறுமி இறந்ததாக, அவரது தந்தை தெரிவித்தார்.
இது குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் தந்தையும் அவரது மைத்துனரும் சேர்ந்து சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதனால் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
49 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
4 hours ago