2026 ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை

டெல்சி ரோட்ரிக்ஸ் ’’புலி’’

Editorial   / 2026 ஜனவரி 04 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ராணுவ படைகள் ஜனவரி 3ஆம் திகதியன்று நடத்திய அதிரடி தாக்குதலில்ல வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார்

 அதன்பின்னர் வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்சி ரோட்ரிக்ஸ் 2018 ஜூன் முதல் வெனிசுலாவின் துணை அதிபராக பணியாற்றி வருகிறார். அவர் நிதி மற்றும் எண்ணெய் அமைச்சராகவும் உள்ளார். துணை அதிபர் பொறுப்புகளை தாண்டி 2 முக்கிய துறையின் அமைச்சராகவும் இருக்கும் காரணத்தால் வெனிசுலா அரசில் மிக சக்திவாய்ந்த நபராக உள்ளார்.

டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ "புலி" என்று நிகோலஸ் மதுரோ வர்ணித்துள்ளார், அவரது விசுவாசம் மற்றும் கொள்கை பாதுகாப்புக்காக பலமுறை பாராட்டப்பட்டு உள்ளார்.

1969 மே 18 அன்று வெனிசுலா காரகாஸில் பிறந்த டெல்சி ரோட்ரிக்ஸ், ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸ் என்ற இடதுசாரி கெரில்லா பிரிவு தலைவரின் மகள் ஆவார். 1970களில் லீகா சோசலிஸ்டா கட்சியை நிறுவியவர் அவரது தந்தை. குற்றச்சாட்டுகள் விவரம் அமெரிக்க அரசு நிகோலஸ் மதுரோ மீது விதித்துள்ள குற்றச்சாட்டுகளை பொதுமக்களுக்கு அமெரிக்க அரசு சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

அமெரிக்கா நிகோலஸ் மதுரோ மட்டும் அல்லாமல், அவரது மனைவி, மகன் மற்றும் மூன்று நபர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் பயங்கரவாத சதி, கொகைன் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் சதி ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளை விதித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .