2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்?

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியத் தலைநகர் டெல்லியில் தற்போது பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

டெல்லியில் தற்போது பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் டெல்லியில் பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்திருப்பதாக மத்திய உளவு படைகள் தகவல் சேகரித்துள்ளன.

இதையடுத்து டெல்லி பொலிஸாருக்கு மத்திய உளவுப்படை எச்சரிக்கை அனுப்பி உள்ளது. ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், பஸ் நிலையம், சந்தை, வணிக நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்.

தற்போது நடந்து வரும் நவராத்திரி விழாவையொட்டி அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று உளவுத்துறை கூறியுள்ளது.

இதையடுத்து பொலிஸ் உயர்அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள 15 மாவட்டங்களில் துணை பொலிஸ் ஆணையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது 15 மாவட்டங்களிலும், கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X