2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ட்ரம்ப்- நெதன்யாகு சந்திப்பு

Editorial   / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு ட்ரம்பை திங்கள்கிழமை (ஏப்.07 ) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, உலகையே உலுக்கி வரும் அமெரிக்காவின் கடுமையான வரிவிதிப்புகளை குறைக்குமாறு நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலஸ்தீனம், ஹமாஸ், ஈரான் உடனான பதற்றமான சூழல் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் உரையாடியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பின் போது பேசிய நெதன்யாகு, “மீண்டும் ஒருமுறை என்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்ததற்காக ஜனாதிபதிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு இன்றியமையாத நண்பர். அவர் எங்களது சிறந்த ஆதரவாளர். அவர் சொல்வதைச் செய்கிறார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை நாங்கள் நீக்குவோம். அதை மிக விரைவாகச் செய்ய நாங்கள் விரும்புகிறோம். இதுவே சரியான செயல் என்று நாங்கள் நினைக்கிறோம்.

 

மேலும் வர்த்தகத் தடைகளையும் நாங்கள் அகற்ற இருக்கிறோம். இஸ்ரேல் பல நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகச் செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .