2026 ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை

ட்ரம்ப்பின் கருத்தை மறுத்த இஸ்ரேல் ஜனாதிபதி

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 01 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கான பொது மன்னிப்பு வந்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இஸக் ஹெர்ஸொக் தெரிவித்ததாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய நிலையில், இக்கருத்தை உடனேயே ஜனாதிபதி ஹெர்ஸொக்கின் அலுவலகம் சவாலுக்குட்படுத்தியது.

சில வாரங்களுக்கு முன்னர் பொதுமன்னிப்பு கோரிக்கை அளிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி ட்ரம்புடன் எதுவிதக் கலந்துரையாடலையும் ஜனாதிபதி ஹெர்ஸொக் கொண்டிருக்கவில்லையென அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் பிரதிநிதியொருவருடன் ஜனாதிபதி ஹெர்ஸொக் கதைத்தாகவும், இருக்கின்ற நடைமுறைகளின் அடிப்படையிலேயே எம்முடிவும் எடுக்கப்படுமென விளங்கப்ப்படுத்தப்பட்டதாக அவரது அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் நெதன்யாகு மீது நம்பிக்கையை மீறியமை, கையூட்டுக்களை பெற்றமை, மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .