2025 மே 14, புதன்கிழமை

“தகுந்த பாடம் கற்றுக்கொடுப்போம்”

Freelancer   / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம் காசாவில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. புதன்கிழமை (01) அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இந்நிலையில், “இஸ்ரேலுக்கு தகுந்த பாடத்தைக் கற்றுக்கொடுப்போம். ஒக்டோபர் 7-ம் திகதி நடத்திய தாக்குதல் போன்று மீண்டும் நடத்துவோம்” என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X