2025 மே 15, வியாழக்கிழமை

தண்ணீர் குடித்த பெண் திடீர் பலி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 2 லீட்டர் தண்ணீரை- அதாவது 4 பாட்டில் தண்ணீரை குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் கூறியதாவது: வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீரை குடித்துள்ளார். 20 நிமிடங்களில் சுமார் 2 லீட்டர் தண்ணீர் குடித்துள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்குச் சுயநினைவு திரும்பவில்லை. அதன் பின்னரே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு நிலைமை மோசமானது. பின்னர் அவர் உயிரிழந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து டாக்டர் பிளேக் ப்ரோபெர்க் கூறியதாவது: இது போன்ற சம்பவங்கள் கோடைக் காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனென்றால் அப்போது தான் வெயில் காரணமாக திடீரென அதிகமான நீரை எடுத்துக் கொள்வார்கள். உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும், போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .