2025 நவம்பர் 05, புதன்கிழமை

’தமிழுக்காக தொடர்ந்தும் போராட்டம் நடத்துவோம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தி.மு.க.வுக்கு பக்கபலமாக இருக்கிறார் வைகோ. வைகோவிற்கு தி.மு.க. சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் சரித்திர சாதனையை பெற்றுள்ளோம். சர்வாதிகாரம் தலை தூக்கி வரும் நிலையில் ஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது. தமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலை நிலவுகிறதாகவும் தெரிவித்தார் .

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111ஆவது பிறந்த நாள் விழா மாநாடு ஆரம்பமானது. அங்கு தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது. ரெயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள்.

தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும், மறு பக்கம் இரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது. நம்முடைய போராட்டங்களின் முன்னணி போர் வாள் வைகோ. திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாம் ஒன்றாகி உள்ளோம்.

தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி தி.மு.க.வுக்கு பக்கபலமாக வைகோ உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X