2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் துப்பாக்கி சூடு

Freelancer   / 2025 டிசெம்பர் 15 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

 தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் இரு நாட்டு இராணுவ வீரர்களும் மோதி கொண்டனர். இதில் கம்போடியா இராணுவ வீரர் உயிரிழந்தார். 

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது. கடந்த ஜூலை மாதம் 24ம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடந்த போரில் 48 பேர் உயிரிழந்தனர். இரு நாட்டு எல்லையில் இருந்தும் சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த போரின்போது எல்லையில் கண்ணிவெடிகள் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டன. 5 நாட்கள் நடந்த போர் பேச்சுவார்த்தைக்குப்பின் முடிவுக்கு வந்தது. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 

தாய்லாந்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டிராட் மாகாணத்தில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இதன் மூலம் தாய்லாந்து - கம்போடியா இடையிலான எல்லை பிரச்சினை கடலோர பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதனை தொடர்ந்து டிராட் மாகாணத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .