2025 மே 19, திங்கட்கிழமை

தரவு விவகாரம்: பீஜிங்குடன் ஹொங்கொங் பேச்சு

Freelancer   / 2022 ஜூலை 27 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லை தாண்டிய தரவு ஓட்டத்தில் பீஜிங் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளமையால் ஹொங்கொங்கின் நிலை குறித்து கேள்விகள் எழும்பியுள்ளன.

இதன்காரணமாக சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகத்துடன் ஹொங்கொங் அரசாங்கம் பேச்சுவார்த்கைளை ஆரம்பித்துள்ளது.

தரவுப் பரிமாற்றங்கள் மீதான கட்டுப்பாட்டை சீன அரசாங்கம் தளர்த்துவதற்கு ஈடாக, பிரதான நிலப்பரப்பில் இருந்து வரும் தரவுகள் நகரத்தை விட்டு வெளியேறுவதைத் தடைசெய்யும் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் உட்பட மேற்கு நாடுகளின் பிரபலமான இணைய சேவைகளை ஹொங்கொங்கில் அணுகலாம் எனினும் சீனாவில் அவற்றை பயன்படுத்தமுடியாது.

ஒரு நாடு, இரண்டு அமைப்புகள் கொள்கையின் கீழ், சீனாவின் கிரேட் ஃபயர்வோல் என்று அழைக்கப்படும் நகரத்துக்குள் தரவு ஒழுங்குமுறை மற்றும் தகவல் ஓட்டத்தில் சுயாட்சியை  ஹொங்கொங் பராமரிக்கிறது.

பீஜிங் முக்கியமான தரவு என கருதுவதை பிரதான நிலப்பகுதிக்குள் வைத்திருக்க முயலும் வகையில், சீனா கடந்த ஆண்டு தரவு பாதுகாப்பு சட்டம் மற்றும் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது.

உதாரணமாக நிலப்பரப்பில் இருந்து தரவுகளை நகர்த்துவதற்கு முன், நிறுவனங்கள் பாதுகாப்பு மதிப்பீட்டிற்குச் செல்ல வேண்டும் என இந்த மாத ஆரம்பத்தில் சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகத்தின் புதிய விதிமுறைத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விதிமுறைகள், ஹொங்கொங்கிற்கு எந்த சிறப்பு அம்சத்தையும் வெளிப்படையாக வழங்கவில்லை என்பதுடன் கட்டுப்பாடுகள் பிராந்திய தொழில்நுட்பம் மற்றும் தரவு மையமாக இருக்க விரும்பும் நகரத்துக்கு ஏற்படுத்தக்கூடிய சவால்கள் நிபுணர்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளன. 

பிரதான நிலப்பரப்பின் அதிகாரிகள் ஹொங்கொங்கை சீன எல்லைக்கு வெளியே கருதினால்,
பிரதான நிலப்பரப்புக்கான நுழைவாயிலாக ஹொங்கொங்கை பயன்படுத்தி வரும் சர்வதேச வணிகங்கள் ஹாங்காங்கில் தரவைச் சேமிப்பது சிக்கலாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X