2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல் போர் நிறுத்த ஒப்பந்தம்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (26) அன்று கையெழுத்தானது.

கடந்த ஜூலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லை பகுதிகளில் மோதல் ஏற்பட்டது.
 பல ஆண்டுகள் இல்லாத வகையில், இம்மோதலில் பலர் கொல்லப்பட்டனர். மேலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.

இதையடுத்து, இம்மோதலை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் மத்தியஸ்தம் செய்தனர்.இதையடுத்து ஜூலை இறுதியில் சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. தற்போது கோலாலம்பூரில் நடப்பாண்டுக்கான 'ஆசியான்' எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

உறுப்பு நாடுகளின் தலைவர்களைத் தவிர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சீன பிரதமர் லி கியாங், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா, தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா, கனடா பிரதமர் மார்க் கார்னி, தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் வருகை தந்துள்ளனர்.

அந்த வகையில், மலேசியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 

இதனால் தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லை பகுதிகளில் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .