2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

திடீரென உருவான துளையால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}



தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள  சுரங்கமொன்றின் மையப் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி சுமார் 82 அடி அகலத்துக்குத்   திடீரென மிகப் பெரிய துளையொன்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,  The Canadian Lundin எனும் நிறுவனம் நிர்வகித்து வரும் குறித்த சுரங்கத்தில், புவியியல் மற்றும் சுரங்க நிபுணர் சென்று சுமார் 200 மீற்றர் ஆழம் கொண்ட அத்துளையில்  ஏதேனும் உலோகம் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதன் போது அதற்குள்  நீர் மாத்திரமே இருப்பது தெரிய வந்துள்ளது. அச் சுரங்கம் அமைந்துள்ள இடத்தில் பூமிக்கு அடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றியுள்ள நிலத்தை சீர்குலைத்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அத்துளையின் அகலம் தொடர்ந்துப் பெரிதாகிக்கொண்டே செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக தற்போது இந்த துளையின் அகலம் 160 அடியாக அதிகரித்து இருப்பதாகவும்,இது முன்னர் இருந்ததை விடவும் இரண்டு மடங்கு பெரியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியானது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X