2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

திபெத்தில் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 126ஆக உயர்வு

Freelancer   / 2025 ஜனவரி 08 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான திபெத்தில், செவ்வாய்க்கிழமை (7) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126ஆக உயர்ந்துள்ளது.

 அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு, செவ்வாய்க்கிழமை (7) காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி, நிலநடுக்கத்தில் 126 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 188 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

மேலும், நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X