2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்குத் தடை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 இந்தோனேசியாவில் `திருமணத்துக்கு  அப்பாற்பட்ட பாலியல் உறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா` கடந்த 2019ஆம்  ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

எனினும் குறித்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் குறித்த சட்ட மசோதாவானது இந்தோனேசியா நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம் மசோதா  எதிர்வரும் 15ஆம் திகதி  நிறைவேற்றப்படும் எனவும், இதன் மூலம் திருமணத்துக்கு அப்பால் பாலியல் உறவு வைத்துகொள்வதும், திருமணத்திற்கு முன் இணைந்து வாழ்வதும் சட்டவிரோதமாகக் கருதப்படுமெனவும்  நிதி அமைச்சர் எட்வர்ட் உமர் ஷெரீப் ஹியாரிஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .