2025 மே 15, வியாழக்கிழமை

திருமணத்தை மீறிய உறவு: ஊழியர்களுக்கு எச்சரிக்கை

Freelancer   / 2023 ஜூன் 29 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக நிறுவனங்களில் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிப்பது உண்டு. வேலைக்கு சரியான நேரத்திற்கு வருவது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது, அதிக விடுமுறை நாட்களை தவிர்த்தல். இப்படி பல கட்டுப்பாடுகளை பல அலுவலகங்களில் நாம் பார்த்ததுண்டு. இதில் ஒரு சில அலுவலகங்கள் மிக கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிப்பதும் உண்டு. அவற்றை மீறினால், வேலையை விட்டு நீக்கும் அளவிற்கு சென்ற நிகழ்வுகளையும் நாம் பார்த்திருப்போம்.

இப்படி இருக்க, சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் மிகவும் வித்தியாசமான விதிமுறையை அமல்படுத்தி உள்ளது. அதன்படி, தனது நிறுவனத்தில் பணி செய்ய கூடிய ஊழியர்கள் திருமணத்தை தவிர வேறொரு தகாத உறவில் இருந்தால், அவர்களை வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த கட்டுப்பாடு சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது. ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் வேலை பார்க்கும் நிறுவனம் எப்படி தலையிட முடியும் என்பது போன்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன. ஜேஜியாங் மாகாணத்தை தளமாகக் கொண்ட சீன நிறுவனம் ஒன்று கடந்த ஜூன் 9 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த புதிய விதிமுறையை அமல்படுத்த போவதாக கூறியுள்ளது. குறிப்பாக திருமணமான ஊழியர்களை குறிவைக்கிறது இந்த விதிமுறையை கொண்டு வந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .