2025 நவம்பர் 05, புதன்கிழமை

தீவிர சிகிச்சையில் லாலு பிரசாத் யாதவ்

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்துவரும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், பீகார் அரசியலில் முக்கியமான ஒருவராக விளங்கினார். மத்திய ரயில்வே துறை நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் போது ரயில்வே துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற லாலு, அதை இலாபத்தில் இயங்கச் செய்தார்.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கிய லாலு, அண்மைகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் மீது 4 மாட்டுத் தீவன ஊழல் வழக்குகள் உள்ளன. அதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிட்னி பாதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 71 வயதான லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக 50 சதவீதம் இயங்கிவந்த அவரது கிட்னியின் செயற்பாடு தற்போது 37 சதவீதமாகக் குறைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்தம் ஆகியவை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X