Freelancer / 2024 ஜூலை 08 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா மிச்சிகனில் டெட்ராய்ட் நகரின் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 19 பேர் படுகாயமடைந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் பற்றிய ஆதாரங்களை சேகரித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.S
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago