2025 மே 15, வியாழக்கிழமை

துப்பாக்கிச்சூட்டில் நால்வர் படுகொலை

Freelancer   / 2023 ஜூலை 04 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மாநிலத்தின் பெரிய நகரம் பிலடெல்பியா. அங்கு  நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என கூறியுள்ள பிலடெல்பியா காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அடையாளங்களோ அல்லது வேறு கூடுதல் விவரங்களோ எதுவும் வெளியிடவில்லை.

உள்ளூர் நேரப்படி, திங்கட்கிழமை (03) இரவு 08:30 மணியளவில் பிலடெல்பியாவின் கிங்ஸெஸிங் சுற்றுவட்டாரத்தில் உள்ள வாரிங்டன் அவென்யூவில் உள்ள 5700-வது பிளாக்கில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .