2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

துருக்கியில் ‘இரண்டு பனிச்சரிவுகளில் 38 பேர் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு துருக்கியில் இரண்டு பனிச்சரிவுகளில் 38 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானோர் முதலாவது பனிச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக பணியாற்றிக் கொண்டிருந்தோரே இரண்டாவது பனிச்சரிவில் புதையுண்டதாக அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.

பனிச்சரிவொன்று நேற்று முன்தினமிரவு தாக்கி ஐந்து பேர் கொல்லப்பட்டதையடுத்து, ஈரானுடனான எல்லையுடனுள்ள வான் மாகாணத்திலுள்ள மலைகளால் சூழப்பட்ட பஹ்செஸரே நகரத்துக்கருகிலுள்ள நெடுஞ்சாலையொன்றுக்கு 300 அவசரசேவைப் பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலையளவில் இரண்டாவது பனிச்சரிவானது குறித்த அணியைத் தாக்கியுள்ளது. அந்தவகையில், இரண்டாவது பனிச்சரிவு தாக்கியபோது 33 பேர் இறந்ததாகவும், ஐந்து பேரைக் கொன்ற முதலாவது பனிச்சரிவில் எட்டுப் பேரை மீட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேரைத் தேடுவதாக துருக்கியின் இடர் மற்றும் அவசரநிலை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, 30 அவசரசேவைப் பணியாளர்கள் மீட்கப்பட்டு அல்லது பனிக்குள்ளிலிருந்து தப்பித்து வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பனிக்குள் சக பணியாளர்களை அவசரசேவை அணிகள் இன்னும் தேடுவதாக வான் மாகாணத்தின் ஆளுநர் மெஹ்மெட் எமின் பில்மெஸ் கூறியுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X