2025 மே 15, வியாழக்கிழமை

துருக்கியில் பரவும் காட்டுத்தீ

Freelancer   / 2023 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரீஸில் பரவி வரும் காட்டுத் தீ, அண்டை நாடான துருக்கியிலும் பரவி வருகிறது. இதனால் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீயில் 1,500 ஹெக்டேர்களுக்கு மேல் எரிந்துள்ளது. மேலும், 48 பேர் பயங்கர புகை காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த காட்டுத் தீயை துருக்கிய தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத் தீ காரணமாக ஏஜியன் கடலில் இருந்து மர்மாரா கடல் வரையிலான கடல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிரீஸில் தீயணைப்பு வீரர்கள் 18 பேரின் எரிந்த உடல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .