2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தென் எல்லைகளில் தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனம்

Freelancer   / 2025 ஜனவரி 21 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் எல்லைகளில், தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனம் செய்வதாக, டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப், திங்கட்கிழமை (20) பதவியேற்றுக்கொண்டார். இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“அமெரிக்காவில் இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்திருக்கிறது. கலிபோர்னியா காட்டுத்தீ பெரும் பணக்காரர்களையும் வீதியில் நிறுத்திவிட்டது.இதனை கருதிற்கொண்டு, தென் எல்லைகளில், தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது.

“பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே எனது நோக்கம். இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X