Freelancer / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்சீனக் கடல் பகுதியில், பிலிப்பைன்ஸுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக் கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது.
அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் அந்த பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. எனவே அந்த நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே அவ்வப்போது அங்கு மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக அங்கு செல்லும் பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியது. எனவே சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் பிலிப்பைன்ஸுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது.
இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இரு நாடுகளும்,செவ்வாய்க்கிழமை (4) மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின.
இதில் அமெரிக்காவின் பி.1-பி குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எப்.ஏ-50 போர் விமானங்கள் போன்றவை ஈடுபடுத்தப்பட்டதாக, பிலிப்பைன்ஸ் விமானப்படை செய்திதொடர்பாளர் மரியா கான்சுலோ தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago