2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72ஆக அதிகரிப்பு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 14 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் தென்னாபிரிக்காவின் பகுதிகளை வன்முறை சூழ்ந்ததில் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.

இதில், சொவெட்டோவிலுள்ள கொள்வனவு நிலையம் ஒன்றில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற கொள்ளை ஒன்றின்போது சனநெருக்கடியில் கொல்லப்பட்ட 10 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ஆரம்பித்த வன்முறையானது தொடருகின்ற நிலையில், பொலிஸாருக்கு உதவுவதற்காக இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வன்முறைகளைத் தூண்டியதாக 12 பேரை அடையாளங் கண்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்த பொலிஸார், மொத்தமாக 1,234 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

குவாஸுலு-நட்டால், கெளடெங் மாகாணங்களிலுள்ள பாரிய நகரங்களிலும, சிறிய நகரங்களிலும் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தகங்கள் சூறையாடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொள்ளை தொடர்ந்தால் அப்பகுதிகளில் அடிப்படை உணவு விநியோகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர்கள் தெரிவித்தபோதும், அவசர நிலையைப் பிரகடனப்படுத்த மறுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .