2025 நவம்பர் 05, புதன்கிழமை

தெலுங்கானா ஆளுநரானார் தமிழிசை

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

ஆளுநராக நியமிக்கப்பட்டமை தொடர்பாக தமிழிசை கருத்து வெளியிடுகையில், “ஆளுநர் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையான உழைப்பிற்கு பா.ஜ., அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் நிரூபித்துள்ளனர். 

எனக்கு ஆதரவு அளித்த தமிழக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ., தலைவராக இருந்த எனக்கு அதை விட மிகப்பெரிய பதவியை கட்சி தலைமை கொடுத்துள்ளது. தமிழக பா.ஜ., தலைவராக எனது பதவிக்காலம், டிசெம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X