2025 மே 14, புதன்கிழமை

தேசிய பூங்காவுக்கு பெண்கள் செல்ல தடை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். உயர்நிலை கல்வி பயில பெண்களுக்கு தடை விதித்தனர். பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

 இந் நிலையில் தேசிய பூங்காக்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் மேலும் ஒரு தடை விதித்துள்ளனர். இதுகுறித்து தலிபான் அரசின் நல்லொழுக்கம் துறை துணை மந்திரி காலித் ஹனாபி கூறும்போது, 'பூங்காவுக்கு செல்லும்போது பெண்கள் ஹிஜாப் அணிவதில் சரியான முறையை கடைபிடிப்பதில்லை. பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன. அதுவரை பெண்கள் பூங்காவுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .