2025 மே 19, திங்கட்கிழமை

தைவானில் அதிகரிக்கும் போர் பதற்றம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தைவான் பிராந்தியத்தைச் சுற்றி சீனாவால் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைத் தடுக்க சர்வதேச அளவிலான ஆதரவை தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென்  கோரியுள்ளார்.

 

சீனா, தைவானைத் தனி நாடக அங்கிகரிக்காமல் சீனாவின் ஒரு பங்கு என்று உலக அரங்கில் வெளிப்படுத்தி வருகிறது. தைவான் தனியாக ஜனநாயகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பினும் சீனா தனது அங்கிகாரத்தை நிலைநிறுத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் அமெரிக்க நாட்டின் சபாநாயகரான நான்சி பெலோசி ஆசியா சுற்றுப் பயணத்தில் சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்குச் சென்றார்.

இதனை அடுத்து சீனா தைவான் மேல் வர்த்தக தடை விடுத்ததுடன், தைவானைச் சுற்றி மாபெரும் போர் ஒத்திகை நடத்தியது. அமெரிக்க நாட்டின் சபாநாயகரான நான்சி பெலோசி தைவான் ஆதரிப்பதாகக் கூறியதற்குச் சீனா அமெரிக்காவிற்குக் கண்டனம் தெரிவித்தது.

தைவான் தன்னை தனி நாடக செயல்படுத்துவதில் மும்முரமாக உள்ள நிலையில் சீனா, தைவான் பிராந்தியத்தைச் சுற்றி வான் வழி, கடல் வழி, நில வழி என்று ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. மேலும் வலிமையான போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X