Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2023 ஜூலை 03 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அப்படிப்பட்ட பரபரப்பான விமான நிலையம் ஒன்றில் நகரும் நடைபாதையில் சிக்கி இளம்பெண் கால் ஒன்றை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாங்காக்கில் உள்ள டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் நகரும் நடைபாதையில் சிக்கி தாய்லாந்து பெண் தனது இடது காலின் ஒரு பகுதியை இழந்துள்ளார்.
விமானத்தில் ஏற ஏறுவதற்காக ஒரு பெண் வந்துள்ளார். அவர் தனது சூட்கேஸ்களுடன் ட்ராலேட்டர் எனப்படும் நகரும் நடைபாதையில் சென்று கொண்டிருந்த போது, அவர் சூட்கேஸ் மீது தடுமாறி விழுந்ததாகவும், அப்போது அவரது கால் நகரும் நடைபாதையில் சிக்கி இழுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கால் நடைபாதையில் சிக்கிய நிலையில், அந்த பெண் கதறித் துடித்துள்ளார். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற விமான நிலைய மருத்துவ ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு முதலுதவி கொடுத்து சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காலின் பாதி பகுதி நீக்கப்பட்டது. தற்போது அவர் நலமமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago