2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 61 பேர் பலி

Mithuna   / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் மிக ஆபத்து நிறைந்த புலம்பெயர் வழிகளில் ஒன்றாக மத்திய தரைக்கடல் பகுதி நீடித்து வருகிறது. இந் நிலையில் லிபியாவின் ஜ்வரா நகரில் இருந்து படகு ஒன்றில் 86 பேர் அகதிகளாக புறப்பட்டனர்.

இந்நிலையில், திடீரென படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. இதனால், படகில் இருந்த சிலர் கடலில் குதித்து நீந்தி கரைக்கு சென்றனர்.

எனினும், அகதிகளில் 61 பேர் நீரில் மூழ்கி விட்டனர் என லிபியாவில் உள்ள சர்வதேச அகதிகளுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

இத்தாலி நாட்டின் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் செல்வதற்கான முக்கிய புறப்படும் இடங்களாக லிபியா மற்றும் துனீசியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த இரு நாடுகளில் இருந்தும் 1.53 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலிக்கு நடப்பு ஆண்டில் வருகை தந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X